Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு

Nov 29, 2024,05:17 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், டிசம்பர் ஒன்றாம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலாக மாறாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும் தற்போது அது புயலாக மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கரையைக் கடக்கும் போது வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்ட கடலோரப் பகுதிகளில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்திருந்தது. 

கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: 



இதனால் சென்னை ,நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்: 

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் எனவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 65 km வேகத்திலும் சூறாவளிக்காற்று வீச கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 9 கிலோமீட்டரிருந்து குறைந்து தற்போது 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. 

இது நாகைக்கு 310 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து  தெற்கு தென்கிழக்கு 400 ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 360 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரெட் அலர்ட்:

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்: 

 தொடர்ந்து டிசம்பர் ஒன்றாம் தேதி மிக கனமழையாக 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?

news

காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?

news

மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிகம் பார்க்கும் செய்திகள்