சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.60 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் ஆறு வரை நடைபெறும்.
www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், +2 தேர்வு ரிசல்ட் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும் எனவும், இதற்கான கலந்தாய்வுகள் ஜூலை இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}