டெல்லி: டெல்லியின் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று பதவியேற்றார் ரேகா குப்தா. இவருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக பெரும்பான்மைக்கு அதிகமாக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, அடுத்த டெல்லியின் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் உடனடியாக முதல்வர் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது எம்எல்ஏக்கள் ஒருமனதாக ஷாலிமார்பாக் தொகுதியில் வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்தனர். பாஜக சார்பில் சுஷ்மா சுவராஜுக்குப் பிறகு, ரேகா குப்தா, டெல்லி முதல்வராகும் 2வது பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே பி நட்டா, ஆகியோர் முன்னிலையில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
{{comments.comment}}