"சுரங்கப்பாதைக்குள்.. 25 நாட்களுக்கு போதுமான உணவு இருக்கு".. மீட்கப்பட்ட தொழிலாளர் தகவல்!

Nov 29, 2023,05:49 PM IST

- மஞ்சுளா தேவி


உத்தரகாசி: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் நேற்று மாலை மீட்கப்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான உணவு இருப்பதாக மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான அகிலேஷ் சிங் கூறியுள்ளார்.


உத்தரகாசி பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சில்க்யாரா  சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இது சார்தாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இங்கு பாதை அமைத்துக் கொண்டிருந்தபோதுதான், சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.




17 நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி, நேற்று மாலை 41 தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்தனர். 57 மீட்டர் இரும்பு குழாய் வழியாக ஸ்டிரச்சர் வைத்து அதன் மூலம் மீட்கப்பட்டனர். தொழிலாளர்கள் வெளியே வரும்போது அவர்களுக்கு மாலை அணிவித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.


மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:


நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென செல்லும் வழியில் மிகப்பெரும் சத்தத்துடன் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. இதனால் என் காதுகள் இரண்டும் மரத்துப்போனது. நாங்கள் சுரங்கப்பாதைக்குள்  சிக்கி கொண்டோம். 18 மணி நேரத்திற்கு மேலாக எங்களுக்கும், வெளி உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 


நாங்கள் சிக்கிக் கொண்ட பிறகு, தண்ணீர் குழாயை திறந்து விட்டோம். தண்ணீர் வெளியே விழ ஆரம்பித்தது. அதன் மூலமாக உள்ளே தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர் என்பதை வெளியில் உள்ளவர்கள் உணர்ந்தார்கள். பின்பு இந்த குழாய் வழியாக எங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தினமும் எங்களுக்கு உணவும் அனுப்பினர்.


சுரங்கப் பாதைக்குள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான அளவு உணவு உள்ளது. உடல் பரிசோதனை முழுவதும் முடிந்தது. நாங்கள் நலமாக இருக்கிறோம். அடுத்து என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது நான் வீட்டிற்குச் சென்று ஒன்று இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்கப் போகிறேன். இது ஒரு இயற்கை பேரழிவு. இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது என அகிலேஷ் சிங் கூறினார்.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்