தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி: எம்.பி.சு.வெங்கடேசன் மகிழ்ச்சி!

Jun 07, 2025,05:32 PM IST

மதுரை: மத்திய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாவெரும் வெற்றியாகும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் ரிசர்வ் வங்கி தங்க நகைகளை அடகு வைப்பவர்களுக்கு பல கெடுபிடியான விதிமுறைகளை விதித்தது. இந்த விதி முறைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தங்க கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வு வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்;




1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.


2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.


3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.


4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.


இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். 


முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

லன்ச் டைம் வந்துருச்சா.. அதுக்கு முன்னாடி.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. உலக உணவு தினம்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்

news

8 போர்களை நிறுத்திய நான் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன்.. மீண்டும் டிரம்ப் பொறுமல்

அதிகம் பார்க்கும் செய்திகள்