சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் தேவகோட்டை காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்கள் பெற்றோரை பெருமை படுத்த வேண்டுமே தவிர
வருத்தப்பட செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினார்.
இந்தியாவில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதாவது சாலை விபத்துகளைக் குறைப்பது, ஓட்டுனரின் பாதுகாப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பது, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 11 முதல் 17 வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தலை முறையினர் நாளைய எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் தேவகோட்டை காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அப்போது இம்முகாமில் கலந்து கொண்ட காவலர்கள் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக விளக்கி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, 18 வயதிற்கு முன்பாக வாகனம் ஓட்டக் கூடாது. அவ்வாறு ஓட்டினால் கடுமையான சட்டங்கள் பெற்றோர்களை சென்று பாதிக்கும்.

நீங்கள் பெற்றோர்களை பெருமைப்படுத்த வேண்டுமே தவிர வருத்தப்பட செய்யக்கூடாது. எனவே யாரும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். இளம் வயதில் வாகனம் ஓட்டுவதை யும் தவிர்த்து விடவும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பதை உங்கள் பெற்றோரிடம் விளக்கிக் கூறுங்கள். உங்கள் அப்பா, அண்ணன், அம்மா சித்தப்பா, சித்தி போன்ற அனைவரையுமே ஹெல்மெட் அணிந்து கொண்டு ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள் .
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் சாவியை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். டூவீலரில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மூன்று பேர், நான்கு பேர் பயணம் செய்யக்கூடாது. என வலியுறுத்தினார்கள் .
மாணவர்கள் பப்ஜி, ஃப்ரீ பையர் போன்ற கேம்கள் எதுவும் விளையாட வேண்டாம்.

18 வயதிற்குப் பின்பும் லைசென்ஸ் எடுத்த பிறகுதான் வண்டி ஓட்ட வேண்டும். லைசன்ஸ் என்பது உடல் மற்றும் மனம் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானது என்பதை உறுதிப்படுத்துவதாகும்.
உங்கள் தாய் தந்தையரிடம் கூறி ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். வாகனம் ஓட்டும் பொழுது உடலில் எந்த பாகம் விபத்தில் பாதிக்கபட்டாலும் மிகப்பெரிய சோகம் உண்டாகும்.
குறிப்பாக விபத்தில் தலையில் பாதிப்பு ஏற்பட்டால் சீக்கிரம் சரிபடுத்த முடியாது. எனவே ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்ட உங்களது அண்ணன், அக்கா, அப்பா, அம்மா ஆகியோரை அனுமதிக்காதீர்கள். வாகன சாவியை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
சாலையில் இடது ஓரமாக செல்லுங்கள். கும்பலாக செல்வதை தவிர்த்து விடுங்கள். ஒருவர் பின் ஒருவராக செல்லுங்கள். குறிப்பாக வெள்ளை கோட்டிற்கு உள்ளே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக செல்லுங்கள்.

அப்பொழுது தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் ஆட்டோவில் அல்லது வேனில் பள்ளிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுனர், வேன் ஓட்டுனர்கள் ஏதேனும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தால் அவர்களது வாகனத்தில் ஏறாதீர்கள். அந்த தகவலை உங்களது பெற்றோரிடம் தெரிவித்து விடுங்கள்.
இளம்வயதில் உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம். சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து உங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மாணவர்களின் சாலை போக்குவரத்து தொடர்பான ஏராளமான கேள்விகளுக்கு காவலர்கள் பதில் அளித்தனர்.இந்நிகழ்வில் பெற்றோர்களும் பெருமளவில் பங்கேற்றனர். விழா நிறைவாக ஆசிரியர் முத்து மீனாள் நன்றி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}