சென்னை: திருப்பதி தேவஸ்தான சென்னை அலுவலகத்துடன் இணைந்து சென்னை ரோட்டரி கிளப் ஒரு சிறப்பான சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 1008 சிறப்புக் குழந்தைகளை சிறப்பு ரயில் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.
திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டு அந்த ஆன்மீக அனுபவத்தை பெற அனைவருமே விரும்புவார்கள். அப்படிப்பட்ட இறை அனுபவத்தை சிறப்புக் குழந்தைகளுக்கும் கொடுக்க ரோட்டரி கிளப் முடிவு செய்தது. இதையடுத்து சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களை திருப்பதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய் வழி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 1008 சிறப்புக் குழந்தைகள் இந்த ஆன்மீக பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பயணத்திற்கு சென்னை நோபள் ஹார்ட் ரோட்டரி கிளப் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த சிறப்பு ஆன்மீக பயணத்தை மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நாளை காலை 7.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.
சென்டிரல் ரயில் நிலையத்தின் 11வது பிளாட்பார்மில் நடைபெறும் இந்த விழாவில் ரோட்டரி இயக்குநர் அனிருத்தா ராய் செளத்ரி, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாதன் ஈர்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}