ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரவுடியின் அட்டகாசம்!

Oct 25, 2023,04:36 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கருக்கா வினோத். அந்தப் பகுதியில் ரவுடித்தனம் செய்து வருபவர். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. 

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்தான் இந்த கருக்கா வினோத்.  கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட நேரத்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் அளித்தார்.



கைது செய்யப்பட்ட வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று டூவீலரில் கிண்டு வந்த அவர் ராஜ்பவன் வாசலுக்கு வந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச ஆரம்பித்தார். ஒரு குண்டு மட்டும் வெடித்து வாசலுக்கு முன்பே சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து வந்து வினோத்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் வெடிக்காத நிலையில் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நட் விலக்கு  மசோதாவில் ஆளுநர் கையெழுத்துப் போட மறுத்ததைக் கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியுள்ளார்.

கருக்கா வினோத்தின் செயல் ராஜ்பவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்