சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர ஊர்திகளுக்கு வழி விட மறுத்தால் ரூபாய் 10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அவசர காலங்களில் பிற உயிர்களை காப்பாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏழை எளிய பாமர மக்களுக்கு ஏதேனும் இடர் ஏற்படும் போது அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு ஏதுவான வசதி இல்லாமல் தவிப்பிற்குள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டு வந்தது.
இதனை கருத்தில் கொண்டு அரசு ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கியது. தற்போது தன்னார்வலர்களும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். மக்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டு எந்த நேரம் ஆனாலும் எமர்ஜென்சி காரணங்களால் அழைத்தாலும் ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக உதவிக்கரம் நீட்டி வருகிறது.
ஆம்புலன்ஸ்கள் அவசரமாக வரும்போது பல நேரங்களில் அதற்கு வழி விடாமல் சிலர் செல்வதையும் பார்க்க முடியும். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுபோல ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழி விட மறுத்தால் பத்தாயிரம் அபதாரம் விதிக்கப்படும் என அந்த மாநகரப் போக்குவரத்து ஆணையர் அறிப்பை வெளியிட்டுள்ளார். சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் வாயிலாக வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விதியை மீறுபவர்களுக்கு ரசீது அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் இன்று வரை பலர் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு செய்து வருகின்றனர். அவசர கால நேரத்தை கருத்தில் கொள்ளாமல் பல இது போன்ற செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை தடுக்க ஹரியானா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சூப்பராக இருக்கும்.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}