ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு விரட்டிட்டு.. சுந்தர் பிச்சைக்கு மட்டும்  சம்பளத்தைப் பார்த்தீங்களா?

Apr 22, 2023,03:53 PM IST
கலிபோர்னியா: ஆல்பாபெட் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ம் ஆண்டு மிகப் பெரியஅளவில் சம்பளம் கிடைத்துள்ளது. ஒரு நடுத்தர ஊழியருக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் ஆல்பாபெட். இதன் செயலதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. இவருக்கான 2022ம் ஆண்டு சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.அதன்படி சுந்தர் பிச்சை 2022ம் ஆண்டு மொத்தமாக 1640 கோடியே 81 லட்சத்து 70 ஆயிரம் தொகையை சம்பளமாக பெற்றுள்ளார். 



கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் மிகப் பெரிய அளவில் பணியாளர்களை நீக்கி வருகிறது. 12,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகம், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள அலுவலங்கள் என எல்லா இடத்திலும் ஆட்கள் நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சுந்தர் பிச்சைக்கு மிகப் பெரிய சம்பளம் தரப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளப் பிரச்சினை, வேலை நீக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து கடந்த மாதம் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் வெளியேறினார்கள் என்பது நினைவிருக்கலாம். அதேபோல ஜூரிச் நகரில் உள்ள 200 பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்த இதர பணியாளர்கள் வெளியேறினர். இந்த நிலையில் சுந்தர் பிச்சை சம்பளம் குறித்த தகவல் மேலும் சலசலப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்