புதுடில்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்கத் தவறியவர்களிடம் இருந்து ரூ.600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. வருமான வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வந்த பின்னரும் ஏராளமானோர் இணைக்காமல் இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் குறிப்பிட்ட காலக் கெடு கொடுத்து இணைக்க வாய்ப்பளித்தது மத்திய அரசு.
குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
அதன் பின்னர் கொரோனா தொற்று பரவியதால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2023 ஜூன் 30ம் தேதி என அறிவித்திருந்தது மத்திய அரசு. இதற்கு மேல் இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும் எனவும் அறிவித்தது.
அதன் பின்னர், ஆதார் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு முதலில் ரூ.500 அபராதம் விதித்தது. அதன் பிறகு காலக்கெடுவிற்கு பிறகு இணைப்பவர்கள் ரூ.1000 அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்து விடும். செயலிழந்த பான் அட்டையை பயன்படுத்த ரூ.10,000 அபராதம் வரை செலுத்த வேண்டியிருக்கும் என வருமானவரித்துறை எச்சரித்தது.
இதன்படி அபராத தொகையை செலுத்தி பான் எண்ணை புதிப்பித்தவர்கள் செலுத்திய தொகை ரூ.601.97 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக லோக்சபாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், கடந்த ஜனவரி 29ம் தேதி நிலவரப்படி, ஆதாருடன் பான் எண்ணை இதுவரை 11.48 கோடி பேர் இணைக்கவில்லை. ரூ.1000 அபராதம் செலுத்தி தாமதமாக பலர் இணைத்துள்ளனர். கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி ரூ.601.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}