சென்னை: சென்னை, திருச்சி , ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியானதா? என தகவல் உரிமைச் சட்டத்தில் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது முதல் நாளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அடுத்த நாள் திருச்சிக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனிதர் நீர் எடுத்துக்கொண்டார்.
பிறகு 21ம் தேதி அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்ற பிரதமர் மோடி தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பிறகு அங்கிருந்து மதுரை வந்து, அங்கிருந்து டெல்லி சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மேற்கொண்ட தமிழக பயணம் குறித்து மூத்த வழக்கறிஞர் துரைச்சாமி பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, திருச்சி , ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவலக ரீதியானதா? அவருடைய பயணச் செலவை ஏற்றது யார் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி தகவல் உரிமை ச் சட்டத்தில் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}