Britain: 14 ஆண்டு கால ஆட்சியைப் பறி கொடுத்தது கன்சர்வேட்டிவ் கட்சி.. ரிஷி சுனாக் பதவி போச்சு!

Jul 05, 2024,10:26 PM IST

லண்டன் :  நடந்து முடிந்த பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. தங்கள் கட்சி பெற்ற தோல்விக்காக பிரதமர் ரிஷி சுனாக் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 14 வருடமாக  கன்சர்வேட்டிவ்கட்சி ஆட்சி பீடத்தில் இருந்து வந்தது. அந்த ஆட்சியை இப்போது முடித்து வைத்து விட்டது லேபர் கட்சி. 


இதுவரை வந்த முடிவுகள் விவரம்:

பெரும்பான்மைக்குத் தேவை - 326

தொழிலாளர் கட்சி - 408

கன்சர்வேட்டிவ் கட்சி - 113

லிபரல் டெமாக்கிரட்ஸ் - 69

எஸ்என்பி - 8

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி  - 8

சீன் பின் - 7

மற்றவர்கள் - 26





லேபர் அல்லது தொழிலாளர் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.


பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிங் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  தொழிலாளர் கட்சிக்கு 410 இடங்களும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 131 இடங்களும், லிபரல் டெமாக்ராட்ஸூக்கு 61 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி கணித்ததை விட குறைவாக அதாவது 113 இடங்களில் மட்டுமே வென்று மண்ணைக் கவ்வியுள்ளது.


இதனால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது. இவர்தான் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து ஆட்சியை தொழிலாளர் கட்சி மீண்டும் பிடித்துள்ளது. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சி.




2010ம் ஆண்டு முதல் 14 வருட காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது கன்சர்வேட்டிவ் கட்சி. ரிஷி சுனாக் தலைமையிலான அரசு மீது கடும் அதிருப்தி அலை வீசியதால் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரிச்மண்ட் மற்றும் வடக்கு ஆலர்டன் பகுதியில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ரிஷி சுனக், தேர்தலில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதுடன், தோல்விக்கு தானே பொறுப்பேற்றதாகவும் தெரிவித்துள்ளார். 


ரிஷி சுனக் பதவி இழந்ததை அடுத்து, தொழிலாளர் கட்சியின் தலைவர் ஸ்டார்மர், பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் ஸ்டார்மர் 18,884 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் 2019ம் ஆண்டு இவர் பெற்ற 22,766 ஓட்டுக்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இவர் பெற்ற ஓட்டு விகிதம் குறைந்துள்ளது. இருந்தாலும் தங்கள் கட்சிக்காக ஓட்டளித்த ஒவ்வொருவருக்காகவும் தான் உழைக்க போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்