சென்னை: நாளை அதிமுக- தேமுதிக இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்த்து வருகின்றனர்.இதற்காக ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து வருகின்றனர். திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில்,அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

மேலும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி அமைப்பதாக சமீபத்தில் தெரிவித்து வந்தார். இந்த கூட்டணி ரகசியமாக நடைபெற்று வந்ததாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வசிக்கும் சாலிகிராமம் வீட்டில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
தற்போது அதிமுக -தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அதிமுக முதல் கட்ட பேச்சு வார்த்தையில் மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்குப் பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாகவும் கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ,ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}