மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினைச் சுற்றிலும் ஏகப்பட்ட டென்ஷன்கள், பதட்டங்கள், பரபரப்புகள் சூழ்ந்து கிடந்தாலும் மனிதர் ரொமான்ஸிலும் முழுக் கவனத்துடன் இருக்கிறார் போலும்.. 71 வயதாகும் அவர் 39 வயதாகும் பெண்ணுடன் புதிய காதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒரு காலத்தில் ரகசிய உளவு ஏஜென்டாக இருந்தவர். பதவிக்கு வந்தது முதல் அவர் குறித்து ஏதாவது சர்ச்சை வந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் முக்கியமானது.. அவரது பெண் தொடர்புகள் குறித்த விவரங்கள்.
சட்டையை மாற்றுவது போல மனிதர் அவ்வப்போது தனது காதலியையும் மாற்றிக் கொண்டே இருப்பார் போல. அவரது நீண்ட நாள் காதலியாக இருந்து வருபவர் அலினா கபயேவா. இந்த நிலையில் தற்போது ஏகதரினா காத்யா மிஸுலினா என்ற 39 வயதுப் பெண்ணை புடின் காதலித்து வருவதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏகதரினா லண்டனில் படித்தவர், வரலாற்று ஆய்வாளர். இவரை செல்லமாக பார்பி கேர்ள் என்றுதான் சொல்கிறார்கள். தற்போது இவர் ரஷ்ய அரசின் பாதுகாப்பான இன்டர்நெட்கமிட்டியின் தலைவராக இருக்கிறார். இவரது தலைமையிலான குழுதான் ரஷ்யாவில் இன்டர்நெட் தணிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இவர் உக்ரைனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவர். தீவிர புடின் ஆதரவாளரும் கூட. அவரது நம்பிக்கையைப் பெற்ற விசுவாசியும் கூட. இவரது தாயார் பெயர் எலினா மிஸுலினா. 69 வயதாகும் இவர் செனட் உறுப்பினர். இவரும் தீவிர புடின் விசுவாசிதான்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 2004ம் ஆண்டு படித்தவர் மிஸுலினா. வரலாற்றில் பட்டம் பெற்ற இவர், இந்தோனேசிய மொழி குறித்த ஆய்வையும் மேற்கொண்டவர். சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் ரஷ்ய குழுக்களுடன் மொழி பெயர்ப்பாளராக பயணித்துள்ளார். இவரது தந்தை மிக்கைல் மிஸுலின் கல்வியாளர் ஆவார். இவருக்கும் 69 வயதாகிறது. அதாவது புடினை விட மிஸுலினாவின் பெற்றோர் வயது குறைந்தவர்கள்.
கூகுளையும், விக்கி பீடியாவையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் மிஸுலினா. முதலில் உக்ரைனை சுத்தப்படுத்துவோம். அதன் பிறகு கூகுள், விக்கிபீடியாவைக் களையெடுக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.
தற்போது மிஸுலினாவும், புடினும் நெருங்கிப் பழகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவைச் சேர்ந்த உள்ளூர் மீடியாக்களும் கூட இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ரணகளத்திலும் புடின் ஜாலியாத்தான் இருக்காரு போல!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}