மாஸ்கோ: குறைந்தது 3 குழந்தையாவது பெற்றுக்கொள்ளுங்கள் என ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 10ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. 1990 களில் சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கடுமையான பொருளாதாரம், சமூகச்சூழலால் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. 2021ம் ஆண்டில் கொரோனா தொற்று .உக்ரைன் மீதான தற்போதைய போர் ஆகியவை அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியின் விகிதம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாம். 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4 லட்சம் சரிவுக்கு பின்னர் 14.5 கோடிகளாக குறைந்தது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்ய அதிபர் புடின் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களை கவுரவித்து, ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டிருந்தார்.
10 பிள்ளை பெற்றால் "அன்னை நாயகி" பட்டம்
10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டமும், அத்துடன் 10வது குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் ரொக்கப்பரிசும் ( சுமார் 13 லட்சம்) வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மக்கள் தொகையால் அந்நாட்டின் பொருளாதாரமும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில கருத்துக்களை அந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குழந்தை இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைவாக உள்ளது.
ஒரு நாடு வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
போரை நிறுத்துங்க பாஸ்.. அப்பத்தானே வரும் ரொமான்ஸ்!
குழந்தைகளை அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் குடும்பத்தில் சந்தோஷம் அமைதி நிலவ வேண்டும். அது நிலவ வேண்டுமானால் நாட்டில் அமைதி தவழ வேண்டும். அதுவும் சரியாக இருந்தால், நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும். பொருளாதார நிலை சரியாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்க பல காரணிகள் தேவைப்படுகிறது.
ரஷ்யா இன்றுள்ள நிலையைப் பார்க்கும்போது அதில் ஒரு காரணி கூட உருப்படியாக இருப்பதாக தெரியவில்லை. உக்ரைனுடன் நீடித்து வரும் போர், பல்வேறு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், மக்களுக்கு வேலைவாய்ப்பு சரியாக கிடைக்காதது என நாடே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதலில் புடின் இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.. நாட்டை சுபிட்சமாக வைத்துக் கொள்பவன்தான் நல்ல தலைவன்.. நாட்டை நிர்மூலமாக்கி, மக்களை வதைப்பவன் அல்ல.. ஒரு குழந்தை பெற்றுக் கொண்டாலே வளர்த்து ஆளாக்க முடியுமான்னு தெரியாமல் ரஷ்யர்கள் திண்டாடிக் கொண்டுள்ளனர்... நாலாபக்கமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் ஊர் எப்ப்படி அமைதியாக இருக்கும்.. மக்கள் எப்படி "சந்தோஷமாக" இருக்க முடியும்.. புடினுக்கு யாராச்சும் அவங்க பாஷைல இதை எடுத்துச் சொல்லுங்கப்பா!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}