ஆன்மீக நாட்டம்.. அம்மாவிடமிருந்து தொற்றிக் கொண்ட கலை.. கனவுகளுடன் கலக்கும் ராஜ் பிரணவ்!

Oct 08, 2025,01:45 PM IST

சென்னை:  சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராஜ் பிரணவ் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவருக்குள் இருக்கும் திறமை இவரை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. தனித்துவத்துடன் வளர்ந்து வரும் ராஜ் பிரணவ் கண்கள் நிறைய கனவுகளுடன் கலக்க ஆரம்பித்துள்ளார்.


இவரது விரல்களில் அத்தனை நயம் இருக்கிறது. அவ்வளவு அழகாக படம் வரைகிறார். இந்தப் படம்தான் என்றில்லை. எல்லா வகையான ஓவியங்களையும் அநாயசமாக வரைகிறார் ராஜ் பிரணவ்.





இவரது தாயார் ரம்யாதான் இவரது இந்த கலைத் திறமைக்கு காரணம். அவரிடமிருந்துதான் இந்த வரை கலை இவருக்கு வசமாகியுள்ளது. அம்மாவின் ஓவியங்களைப் பார்த்து இவரும் கற்றுக் கொண்டாராம். எல்கேஜி முதலே இவர் வரைய ஆரம்பித்து விட்டார்.


இதுகுறித்து அவரது தாயார் ரம்யா கூறுகையில், எனது கணவர் பெயர் மணிகண்டன். எனது மகன்தான் ம. ராஜ் பிரணவ். நாங்க சேலம் மாவட்டம், ஆத்தூர்.




என் மகன் பாரதியார் ஹை டெக் பள்ளி CBSC ஆத்தூர் - ல் படித்து வருகிறார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். காரணம் சிறு வயதிலிருந்தே சிறப்பாக ஓவியம் வரைந்து வருகிறார். ஓவியத்தில் நிறைய சாதனை புரிந்து உள்ளார். அவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு ஓவியம் வரையும் திறமை உள்ளது என்பதை கண்டு பிடித்தோம். அவரை இன்னும் சிறப்பாக வழிநடத்த அவரை பரிமளா Mam அவர்களிடம் ஒப்படைத்தோம்.


என் மகனை ஓவியத்தில் சிறந்த மாணவனாக அவர்தான் உருவாக்கினார். என் மகன்   ஓவியத்தில் நன்கு வருவதை கண்டு பரிமளா Mam நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள தயார்படுத்தினார். அதில் கலந்து கொண்டு நிறைய சான்றிதழ்கள், பதகங்கள்,கோப்பைகளை வாங்கி குவித்து உள்ளார் 




Best Achiever Award _Indiaan world Record chennai, Award of Excellence _Nobel seva Ratna Award Coimbatore 2020, Young Achiever Award_Chennai,  Amazing T 2021_Nobel Book of world Record, Healthy India Art Excellence Award _NCED ,Pune , சிகரம் மாமணி விருது" 2022  குமரி, சிங்கார வேலர் வீர விருது, திண்டுக்கல், State level All India Swachh Bharat Art Compitition _Grade A+, National level competition _Grade A+, Best performance Award _Mumbai  என விருதுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என் மகனின் சாதனைகளை பட்டியல் இட்டு சொல்லிக்கொண்டே போகலாம் என்று கூறினார்.


ராஜ் பிரணவ் ஓவியத்தில் மட்டுமல்ல பல துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமாக இருந்து வருகிறாராம். அசைவ உணவுகளை சாப்பிடுவதே இல்லையாம். திருச்சியில் வசிக்கும் தனது அத்தை  மாலா சிவக்குமார் வீட்டுக்குப் போவது என்றால் அதிகம் பிடிக்குமாம். காரணம், அவர்தான் இவருக்குள் ஆன்மீக நாட்டத்தை புகுத்தியவர். கோவில்கள் பலவற்றுக்கும் போவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.




தனது அபாரமான ஓவியத் திறமை காரணமாக பள்ளியில் மிஸ்டர் கிரியேட்டிவ், மிஸ்டர் பெர்பெக்ட் என இரண்டு கெளரவங்களும் ராஜ் பிரணவுக்குக் கிடைத்துள்ளன. ஓவியப் போட்டி எந்த இடத்தில் நடந்தாலும் அங்கு ராஜ் பிரணவ் இருப்பார். பல்வேறு ஊர்களில் பல்வேறு அமைப்புகள் நடத்திய ஓவியப் போட்டிகளிலும் அவர் பங்கேற்று அசத்தியுள்ளார். பரிசுகளைப் பெற்றுக் குவித்துள்ளார். 


ஓவியப் போட்டி தவிர திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் நடத்திய திருவாசகம் முற்றும் எழுதும் உலக சாதனை நிகழ்விலும் பங்கேற்றுள்ளார். இவரைப் போலவே இவரது தங்கையும் தனித்துவத்துடன் வளர்ந்து வருகிறார். அவர் யோகாசனத்தில் அசத்தி வருகிறாராம்.




எதிர்காலத்தில் உங்களது கனவு என்ன என்று கேட்டால், முதலில் நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர வேண்டும். அதன் பிறகு ஓவியக் கலையில் பெரிதாக  சாதிக்க வேண்டும். எதிர்காலத்தில் நான் என்னவாக மாறினாலும் கூட ஓவியத்தை விட மாட்டேன். இதில் முத்திரை பதிப்பதே எனது லட்சியம். தஞ்சாவூர் பெயின்ட்டிங்கில் நிறைய நாட்டம் உள்ளது. அதில் கற்றுத் தேற வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன் என்று சொல்கிறார் ராஜ் பிரணவ்.


ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. பலர் திறமையை பளிச்சிடச் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் சிறந்து விளங்கவும் மெனக்கெடுகிறார்கள். அந்த வரிசையில் ராஜ் பிரணவும் தனது எதிர்கால வாழ்க்கையில் ஓவியத்துக்கும் முக்கிய இடம் இருக்கும் என்ற இலக்குடன் நடை போடுவது பாராட்டுக்குரியது. நீங்களும் பாராட்டுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டான்ஸ், ஓவியம்.. திருவள்ளுவர் வேடம் தாங்கி.. திருக்குறள் சொல்லி.. அசத்திய சிறப்புக் குழந்தைகள்!

news

பொக்கிஷம் (குட்டிக் கதை)

news

தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் காக்க கை கொடுக்குமா AI?

news

நடிகை நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி.. போலீஸ் தீவிர சோதனை

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தவெக வழக்கு

news

ஆன்மீக நாட்டம்.. அம்மாவிடமிருந்து தொற்றிக் கொண்ட கலை.. கனவுகளுடன் கலக்கும் ராஜ் பிரணவ்!

news

Cooking Tips: முருங்கைக் கீரையில் துவையல் செய்து சாப்பிட்டுள்ளீர்களா.. அட சூப்பரா இருக்குமுங்க!

news

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!

news

கேள்வி கேட்டதற்காக வழக்கறிஞரை போட்டுத் தாக்குவீர்களா.. விசிகவுக்கு அண்ணாமலை கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்