- ஸ்வர்ணலட்சுமி
சேலம் கோட்டை மாரியம்மன் பண்டிகை சேலத்து மகாராணி கோட்டை மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோலாகலமாக பண்டிகை நடத்தப்படுகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா சேலத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்று ஆகும் .இது ஒரு வாரத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் ஆறாம் தேதி ஆடி மாதம் 21ஆம் நாள் புதன்கிழமை சேலம் மாநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாரியம்மன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி உள்ளூர் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப் பண்டிகை அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கும் .சேலத்தில் உள்ள மற்ற அனைத்து மாரியம்மன் கோவில் களுக்கும் கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்தே பூ எடுத்துச் செல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆடிப் பண்டிகையின் கொண்டாட்டங்களில் சேலத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்வர். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் ,அபிஷேகங்கள் அலங்காரங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வகையான கலாச்சார நிகழ்வுகள் ஊர்வலங்கள் என ஊரே திருவிழா கோலமாக காணப்படும்.
வீடுகளில் ஆடி செவ்வாய் கிழமையான இன்று கலசம் வைத்து கலசத்தில் நீர் ஊற்றி ,தேங்காய், வேப்பிலை ,மலர்கள் வைத்து கத்தரிக்காய்- மொச்சை சேர்த்து குழம்பு வைத்து ,முருங்கைக்கீரை சமைத்து ,பூரண கொழுக்கட்டை செய்து, பச்சரிசி மாவினால் தீபம் போன்ற கொழுக்கட்டையும் செய்து ,அதில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ,வாழை இலையில் சாதம் ,குழம்பும் , முருங்கைக்கீரை, கொழுக்கட்டை இவற்றை அம்மனுக்கு படைத்து பூஜை செய்து ,கும்பம் ஊற்றுதல் எனப்படும் கும்ப பூஜை வழிபாடு பல வீடுகளில் கடைப்பிடிப்பார்கள். படைத்த சாதத்தை கலந்து கும்ப சோறு என்று அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழ்வார்கள். படைத்த இந்த கும்ப சோறு மிகவும் ருசியாக இருக்கும். மாவிளக்கு செய்து அம்மனுக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
மறுநாள் புதன்கிழமை கலசத்தில் உள்ளது நீரை மாரியம்மன் கோவில்களில் உள்ள கம்பத்தில் ஊற்றி "உருளு தண்டம் "வைத்து வழிபாடு செய்வார்கள். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று வழிபடுவது ஊரே கோலகாலமாக காணப்படும். இதனைத் தொடர்ந்து மறுநாள் வானவேடிக்கை முழங்க வண்டி வேடிக்கை சேலத்தில் குகை, செவ்வாய்பேட்டை அம்மாபேட்டை போன்ற இடங்களில் பிரசித்தியாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து விழாவின் நிறைவாக சத்தாபரணம் நடைபெறும் சேலத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து அனைவரும் சேர்ந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.
சேலம் கோட்டை மாரியம்மன் அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக! மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}