சென்னை: அக்டோபர் 13ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் சமாரா வெளியிடப்படுகிறது.
பீக்காக் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.கே.சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் சமரா. இப்படத்தில் ரகுமான், பரத்,விவேக் பிரசன்னா,கேனஸ் மேத்திவ் ஜார்ஜ்,சோனாலி சூடன், டினிஜ் வில்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக்வாரியர் பாடல்களுக்கு இசை அமைக்கிறார், கோபி சுந்தர் பின்னணி இசை அமைக்கிறார். மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.
துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கண்ட படங்கள் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது சமாரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பினோஜ் வில்லியா நடித்துள்ளார். இவர் பெண்டுலம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இந்த படத்தில் பினோஜ் ஆலன் மோசஸ் என்ற கதாபாத்திரத்திற்காக 18 மணி நேர மேக்கப் செய்துள்ளார். ஏன்னெனில், வெடிகுண்டில் உயிர் பிழைத்தவரின் கொடூரமான பாத்திரத்தை சித்தரிப்பதற்காக இந்த மேக்கப் செய்யப்பட்டுள்ளது.தற்போது சமரா தமிழில் வெளியாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்பில் இருக்கிறார் பினோஜ்.
படத்தை சார்லஸ் ஜோசப் இயக்குகிறார். படம் குறி்த்து அவர் கூறுகையில், பேமிலி மற்றும் அறிவியல் கலந்த பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் பாராட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
{{comments.comment}}