அடியே....நீ!

Sep 23, 2026,03:24 PM IST

- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


வெண்முகிலா ?

வெண்நிலவா?


வெண்தாமரையா?

வெள்ளை அன்னமா  ?


வெண்புறாவா?

நீராடும் நித்திலமே ...


அலைகையில் வெண்முகிலாகிறாய் ...


ஒளிர்கையில் வெண் நிலவாகிறாய்...




நீரிலாடும் போது வெண் தாமரையாகிறாய் ...


நீராடி எழுந்த நடையில் வெள்ளை அன்னம் ஆகிறாய்... 


அமைதியை நெஞ்சில் தந்து 

வெண்புறாவாகப் பறந்துசெல்கிறாய்...

கொல்லாமல் கொல்பவளே 


ஒரு சொல்லைச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போயேன்...!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்