முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வரவேற்ற.. சரத்குமார் குடும்பத்தினர்!

Jun 08, 2024,05:09 PM IST
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள நிலையில்,முன்னதாக சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் முதல்வரை சந்தித்து சரத்துக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை கொடுத்தனர். 

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தனது நடிப்பின் திறமையை வளர்த்து  உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற போல் தனது உடல் முகபாவனைகளை மாற்றி நடிப்பின் திறமையை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர். இதன் மூலம் இவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றுவரை இருந்து வருகிறது. இது தவிர குணசேத்திர வேடங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிக்க வரும் காலகட்டத்திலேயே சரத்குமாருக்கு சாயாதேவி என்ற  மனைவி இருந்தார்.சரத்குமார்- சாயாதேவி தம்பதியினருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரு மகள்கள் உள்ளனர். சில வருடங்களுக்குப் பிறகு சாயாதேவியை பிரிந்த சரத்குமார் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.



நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது வில்லாதி வில்லனுக்கே டஃப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமாருக்கும்,  மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நிக்கோலஸ் சச்தேவ் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி டைவர்ஸ் பெற்றவர்.இந்த தம்பதியினரின் திருமணம் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது.  இதற்கிடையே சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு திரை நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள், உறவினர்கள், தொழிலதிபர்கள்,என அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.


இந்த திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சரத்குமார் குடும்பத்தினர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சென்று ரஜினியின் குடும்பத்தினரான ரஜினியின் மகன்,  மனைவி அனைவரையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர். 

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்