- சசிகலா விஸ்வநாதன்
பார்க்கும் பார்வையில் ஒரு விதமான நக்கல்.
பேசும் வார்த்தையில் ஒரு கிண்டல்.
இவை ஏதும் இல்லாமல் எதார்த்தமான ஒரு நட்பு மனம் கொண்ட சிறுவயது தோழி கீதாவுடனான சந்திப்பு இனிது.
அவள் இத்தனை வருடங்களுக்குப் பின் முயற்சி செய்து சந்திரனைத் தேடி கூட்டி வந்தது உமாவுக்கு எதிர்பாரா நிகழ்வு. உமா பற்றி நன்கு அறிந்தும் சந்திரன் அவளை திருமணம் செய்ய முன் வந்திருப்பது இன்றைய உமா என்ற அன்றைய உமேசனுக்கு ஆனந்த அதிர்ச்சி.

பள்ளியில் படிக்கும்போது துளிர்த்த நட்பு இப்போது காதலாக மலர்ந்தது தான் ஆச்சரியம்; இருவருக்கும்.ஊரார் உறவினர் பேச்சுக்களை உதாசீனம் செய்த சந்திரனின் அன்பு உமாவைத் திக்குமுக்காட செய்தது.
நட்பின் பரிமாணம் மாற்றம் அடைந்தாலும் நேசத்தின் நெருக்கம் அப்படியே தொட்டில் நட்பு வாழ்வு முழுவதும். எவருக்கு கிடைக்கும், இப்படி ஒரு வாழ்வு.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
{{comments.comment}}