தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)

Sep 05, 2026,02:20 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


நீராழி கரையில், 

எண்திசை தெய்வமென

விரிந்த மலராசனத்தில்

அலர் அரவிந்த கரங்கள்;

சிறு உந்திச் சுழலாழி;


அகன்ற  மார்பில்

அணி மணிகளுடன்:

முப்புரி நூலும், கங்கணமும்,;

மேல் கை வளைப்பும்;




உயர்த்திய  இரு கரங்களில் 

சங்கமும், பத்மமும்,

செவ்வாழை பூ நேர்

சங்கு கழுத்தும்;

அதை அணி செய்யும்    

கண்டிகையும்;


என் மன்றாடல் கேட்கும் 

மகர குழையுடை  

நீள் செவியும்;

அருள் பொழி மலர் முகம் 

ஒரு மூன்றில்,

பூத்த குமிண் புன்னகையும்;


மோன தவத்தில் அமைந்த 

இரு மூன்று கண் மலரும்,

வில்லென வளை

புருவ மத்தியில் நம்

அம்பென எழும்பும்

கூர்  நுதல் திலகமும்;

உச்சியில் ஒருங்கும்

மும்முடி  மகுடமும்;

காட்டுவெதெல்லாம்; ஒன்றே!


இயற்கையைத் தொழு.!

இயற்கையை நேசி!

இயற்கையை பணிந்து கல்!

இயற்கையிடம்  அமைதி கொள்!


காற்றிலும் கனலிலும்

அனலிலும் புனலிலும் 

மண்ணிலும்  விண்ணிலும்- விரி

வானிலும் விசும்பிலும்

நானும் நீயும் 

அறியும்  செறிவறிவு

வேறெங்கும்  நான் காணேனே


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

“Teaching: A Gift from God”

news

தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

நெஞ்சத்தில் நீங்காத இடம்பெற்ற ஆசிரியர்களே!

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்