Tamil Short Story: எதார்த்தம்!

Jun 17, 2026,01:22 PM IST

வைத்தியநாதன் அஷ்ரஃப் பானுவை நிமிர்ந்து பார்த்தான்; கலங்கிய கண்களுடன். "வேண்டாம்  நாதன். நிறைய யோசித்து விட்டேன்  நாம் இந்த முடிவை  எடுக்க வேண்டாம்." என்றாள்; பானு


"ஏன், பானு! நம் காதலில் ஏன் உனக்கு ஏன் இத்தனை அவநம்பிக்கை! என் உறுதியில், ஏன் விஸ்வாசம் இல்லாமல் இருக்கிறாய்? நாம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருக்கும் அன்பில் ஏன் இத்தனை சந்தேகம்? " என்று கேட்டான்; நாதன்.


நம் காதலில் எனக்கு அவநம்பிக்கை இல்லை. அன்றாட  போராட்டங்களைத் தாங்கும் வல்லமை;  நமக்கு இல்லை.


"என்னை உன்னால் அஷ்ரஃப் என்று உன் வீட்டில் வைத்து கூப்பிட முடியுமா"

அதை விடு;  தனிமையில் கூட நீ என்னை ஒரு நாளாவது  'அஷ்ரஃப்' என்று கூப்பிட்டு இருக்கிறாயா?

அதற்குண்டான துணிவு இல்லைதானே.

 

உன்னால் ஒரு முறையாவது. ரம்ஜானுக்கோ பக்ரித் பண்டிகைக்கோ; என் வீட்டிற்கு வந்து தங்க இயலுமா?

உன் வீட்டு மத சடங்குகளில்  நான் கலந்து கொண்டால், உன் வீட்டார்களுக்கு ரசிப்பாய் இருக்குமா?




நாம் இன்னும் நம் வேர்களைச் சார்ந்தே  இருக்கிறோம். நம்மால் அதை விட்டு  விலக  இயலாதது  போல் தெரிகிறது.

வாழ்வில் போராட்டங்களை சமாளிக்கத் தான் வேண்டும் என்று மனம் சொல்கிறது.


அன்றாட வாழ்வே போராட்டமாய் மாறும் போது; காதல் திருமணம் இனிக்காது; என்று புத்தி சொல்கிறது.

பிரிந்து செல்வதே சரி.


இனி என்னை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாதே. துன்புறுத்தும் இனிய நினைவுகள் காலப்போக்கில் மறந்து போகட்டும் என்ற படி, அஷ்ரஃப் பானு திரும்பிப் பார்க்காமல் வெளியே நடந்தாள்; கண்ணீருடன் விம்மும் வைத்தியநாதனை தனியே விட்டு.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்