- சசிகலா விஸ்வநாதன்
ஆயிற்று; இன்றுடன் மணிகண்டனின் காரியம் எல்லாம் முடிந்து அவரவர் இல்லம் திரும்பியாயிற்று.
இருவர் பெயரையும் இணைத்து பேரனுக்கு ஆசையாய் ‘ஞானமணி’ என்று பெயரிட்ட மாமனார் ராமலிங்கம். திண்ணையில் முடங்கிக் கிடந்தார்.
மாமியார் விசாலம் மயக்கத்திலும், விழிப்பிலும்.உறக்கத்திலும் . அண்ணா- மன்னி அப்பா, இவர்கள் மட்டும்; இன்று என்னுடன் தங்கல். நாளை அவர்களுடன் கிளம்ப வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள்.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கி, ஒரு மாறுதலுக்கு பெங்களூரில் வந்து அவர்களுடன் இருக்க வேண்டுமாம். சிறிது நாள்கள் சென்றவுடன் விருப்பப் பணி மாற்றம் பெற்றுக்கொண்டு பெங்களூரிலேயே செட்டில் ஆகி விடலாம், என்று ஆலோசனை சொன்னார்கள்.
’என்னைத் தனியாக விடுங்களேன்" என்று உரக்க கத்தலாம் போல் இருந்தது ஞானத்திற்கு." எந்த மாறுதலும், திசை திருப்புதலும் வேண்டாம். இங்கு மணியின் பெற்றோரோடு இங்கேயே நான் நலமாக இருப்பேன். மணியின் பெற்றோருக்கு உகந்த மருமகளாயும், உற்ற மகளாயும்,என் வாழ்வு அமைதியாய் இங்கேதான் இருக்கும்.

அவன் பெற்றோர், மாறுதல் தேடி எங்கே போவார்கள்? எங்கள் எல்லோருக்கும் தேவை ; ஆறுதல்தான்; மாறுதல் அல்ல.நான்கு வயதான குழந்தை ஞான மணி, " அம்மா! பாட்டி உங்களை கூப்பிடுகிறார்கள்," என்று சொல்ல, அவள் மணிகண்டனின் தாயார் அறைக்கு தன் மகனுடன் செல்ல எழும்பினாள்; அவள் அண்ணி முகத்தை சுளிப்பதைக் கண்டும் காணாதது போல்....!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}