- சசிகலா விஸ்வநாதன்
பித்தளை ஃபில்டரில் டிகாஷன் இறங்கும் சத்தம்' 'ட் ட்'என்று கேட்டது; மனதுக்கு எத்தனை இசைவாக உள்ளது? எது எப்படி ஆனாலும் காலையில் காஃபி குடிப்பது என்பது, ஒரு ரசனையான சாங்கியம்தான்.
இதோ; பால் பொங்கி வருகிறது. ' சட் என் அடுப்பை நிறுத்திவிட்டு, பித்தளை டபராவில் டிகாஷனை விட்டு பொங்கும் பாலை அதன் மேல் விட்டு ஒரு சுழற்று சுழற்றி இரண்டு பித்தளை டம்ளர்களில் விடும் முன், சந்துரு தன் செல்பேசியில் இளையராஜா பாடலை போட்டபடி, டைனிங் டேபிளுக்கு வந்து அமருவதை உணர்ந்த பத்மா, "ஏது இன்னிக்கு நான் குரல் கொடுக்கும் முன் எழுந்து விட்டீர்களே!" என்றபடி, வேகமாக காஃபியை எடுத்து வந்தாள்.
" ஆமாம்! காஃபி டிகாஷன் இறங்கும் போதே முழிப்பு கொடுத்து விட்டது. நீ டபராவில் காஃபி விடும் சத்தத்திற்காகத்தான், காத்திருந்தேன். காலை வேளையின் ஏகாந்தத்தில் நாம் இருவரும் இப்படி சேர்ந்து உட்கார்ந்து காஃபி குடிப்பது, எவ்வளவு அருமையான விஷயம்! இந்நேரத்தில் தான் முக்கியமான வீட்டு விஷயங்கள் பேசி வேலைகளை திட்டமிடுகிறோம்.
நாட்டு நடப்பு, அரசியல், என்று எதாவது ஒரு அரைமணி நேரம் பேசினால்தான், உற்சாகமாக பொழுது விடிகிறது; நமக்கு; இல்லையா? என்றான்; சந்துரு. பத்மா,

" அது சரி! இன்று நமக்கு வெளி வேலைகள் இருக்கின்றன. எட்டு மணிக்கெல்லாம் கிளம்பணும். குக்கரில் பருப்பு மட்டும் வேகப் போட்டு வந்துடறேன். கொஞ்சம் இருங்க!" என்று சொல்லி எழுந்தாள். 'சட்' என,அவளது இடது கையை, சந்துரு தனது இடது கையாலேயே அழுந்தப் பற்றி அமர்த்தினான். இந்த நேரத்தை நான் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்; அரைமணி நேரம் தள்ளி கிளம்பிச் போனா, என்ன ஆகும்?
நேரடியாக போகும் பஸ் மிஸ் பண்ணிடுவோம். பஸ் மாறி போகணும்; இல்லைனா; ஆட்டோ எடுக்கணும்; அதானே சொல்லப் போகிறாய்! விடு ஆட்டோவிலேயே போய் வரலாம்;" என்ற சந்துரு, எழுந்து, பத்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து; தன் டம்ளரில் இருந்து கொஞ்சம் காஃபியை அவள் டம்ளரில் மாற்றினவன்; வாழ்க்கையை நிதானமாக ரசித்து ருசியோடு வாழக் கற்றுக் கொள். 'வேலை வேலை'ன்னு 'பறந்து பறந்து' செய்யாதே." என்று ஆதுரத்துடன் சொன்னவனை, காதலுடன் பார்த்தாள்; பத்மா.
சில வீடுகளில் காலை காபியுடன் தான் காதலும் மலர்கிறது; என்று நினைத்துக்கொண்டே, இசைவான காற்று ஒன்றை வீசி பவளமல்லிப்பூவின் வாசனையை அந்த இல்லத்தின் உள்ளே, அனுப்பிவைத்தார் இறைவன்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
சிந்தனைச் சிதறல்.. முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்
செப்டம்பர் 8 வரை சட்டமன்றக் கூட்டம் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்
சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா
திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்
முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்
காலை காபியும் காதலும்
{{comments.comment}}