காத்திருக்கும் இல்லம்

Aug 01, 2026,04:06 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அவர்கள் வானூர்தியில் சென்று விட்டனர்! 

இல்லம் அமையாகியது... 

இது 

என்ன;

எப்படி;

ஏன்; 

இந்த வினாக்களின் 

எதிரொலி   நின்றதும்;

ஒரு சங்கடம் இருந்ததோ?


மருத்துவர் , அவள்  சந்தியில் பணிக்கு சென்று அந்தியில் திரும்புவாள்! 

கணினி வல்லுநரின் அறை மூடி தாள் போட்டாயிற்று! 

அறை,

இனி,

அவள் குரலுக்கு 

மட்டுமே திறக்கும்; அந்தியில்.




ஆடாத ஊஞ்சல் ;

மீட்டாத பியானோ போல்

ஒசையற்று போனது.


உணவு மேசையும் 

வளியடுப்பும் 

காத்திருக்கின்றன!


தொலைக்காட்சி பெட்டி   

ஆழ்ந்த உறக்கத்தில்.

 

பூச்சாடிகளால் மட்டும் சும்மா இருக்க இயலவில்லை!

தமக்குள் பேசி சிரிக்கின்றன;  அவன் செவிக்குப் போகாமல்.


வீடு தனித்து விடப்பட்டது தான்;

ஆனாலும்,

தனிமையில் இல்லை!

மாலை நேர உயிர்ப்பிற்காக... 

காத்திருக்கின்றன!


உற்சாக காரொலி கேட்க;

உல்லாச இரவுக்கு

களிப்பான 

மாலை கட்டியம்  கூற.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்