"ஒரு திருமுருகன் வந்து ஆங்கு.. உதித்தனன் உலகம் உய்ய".. தொடங்கியது சஷ்டி விரதம்!

Nov 13, 2023,03:32 PM IST
திருச்செந்தூர்: முருகனுக்குரிய விரதங்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை.பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும்.  அந்த சஷ்டி விரதம் இன்று தொடங்கியுள்ளது.

விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை உண்டு விரதம் இருத்தல் வேண்டும். மதியம் மட்டும் உணவு உண்டு. காலை மாலை ஆகிய 2 வேளையும் பால் பழம் மட்டும் உண்ண வேண்டும்.

முருகனின் முகம் ஆறு ஆகும். சஷ்டி விரதமும் ஆறு நாள். ஆறு நாட்களும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர்.  சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.



முருகனின் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கைகூடி வரும்.  சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

"அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!"

இது கந்தபுராணம்..  இந்தப் பாடலை உள்ளன்புடன் சொன்னால் குழந்தைப் பேறு பெறலாம். எனவே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்களுக்கு  இது மிகவும் சிறந்த விரதமாகும். சஷ்டி விரதம் இருப்போம்.. முருகனின் திருவருளுடன், நலம் பல பெறுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்