சூப்பர்... குட்நியூஸ்.. எஸ்பிஐ வங்கியில்.. வேலை காத்திருக்கு!

Sep 07, 2023,02:12 PM IST
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) புரபேஷனரி ஆபீசர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்கள் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2000 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இன்று முதல் (செப்டம்பர்7 ) செப்டம்பர் 27, 2023 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த பணிக்கான தகுதி மற்றும் விண்ணப்பித்தல்:

எஸ்பிஐ துணி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் பயிலும் மாணவ மாணவிகளும் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்கள் நேர்முகத் தேர்விற்காக அழைத்தால் அவர்கள் டிசம்பர் 31, 2023 அல்லது அதற்கு முன்பு உள்ள செமஸ்டரில்  தேர்ச்சி பெற்ற சான்றிதழை தற்காலிகமாக சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு ஏப்ரல் 1, 2023 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

துணை மேலாளர் பதவிக்கான தேர்வானது, முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு ஆகியவை மூலம் மேற்கொள்ளப்படும். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். 

விண்ணப்பதாரர்கள் தகுதி -1 மற்றும் தகுதி-2 இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் இறுதி பட்டியலில் தகுதி- 3 சேர்க்கப்படும். இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது, பொருளாதார ரீதியில் பின் தங்கியிருப்போர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 750 விண்ணப்ப கட்டணமாகும்.  தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஒரு தடவை செலுத்திய விண்ணப்ப கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெற இயலாது.

மேலும் விவரங்களுக்கு:

https://sbi.co.in/web/careers/current-openings

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்