மேற்கு வங்காள டாக்டர்கள்.. நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Sep 09, 2024,06:21 PM IST

டெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார் 2ம் ஆண்டு பயிற்சி மருத்துவர். ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவர் கடந்த மாதம் 9ம் தேதி கல்லூரி கருத்தரங்கு அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




போலீசார் செய்த விசாரணையில், பணியில் உடன் இருந்த மருத்துவரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொடூரமான இந்த பாலியல் பலாத்கார, கொலைச் சம்பவத்திற்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கொல்கத்தாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சம்பவம் நடந்த மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இந்த வன்முறையால் விசாரணை, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. 


இந்நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பாடது என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு பணி விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என  உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்