ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட் அதிரடி

Aug 04, 2023,02:21 PM IST

டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.,பியாக தொடரவும், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




2019 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, திருடர்கள் அனைவரும் மோடி என்ற பெயர் வைத்தவர்களாக உள்ளனர் என ராகுல் காந்தி பேசினார். இதனை எதிர்த்து குஜராத் பாஜக எம்எல்ஏ., சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் சமீபத்தில் சூரத் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் 8 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.


இதனால் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டைனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் சூரத் கோர்ட், குஜராத் ஐகோர்ட் உள்ளிட்டவற்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சூரத் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரைணக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்தது.


இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டும் ராகுல் காந்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்திக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்றும்  நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய பெஞ்ச் கேட்டுள்ளது.


மேலும் நீதிபதிகள் கூறுகையில், அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சூரத் கோர்ட் தெரிவிக்கவில்லை. அது ஏன்? தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் பொது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்களர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராகுலுக்கு எதற்காக சிறை தண்டனை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் விளக்கம் தர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 


அதேசமயம், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ராகுல் காந்திக்கு அறிவுரை கூறியுள்ளனர்.


சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.,யாக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்