என்னா வெயிலு.. என்னா வெயிலு.. மண்டையைப் பொளக்குதே.. அனலில் சிக்கிய சென்னை!

May 15, 2023,12:47 PM IST
சென்னை: சென்னையில் இன்று கடுமையான வெயில் அடித்து மக்களை மிரள வைத்து விட்டது. அனல் காற்றின் காரணமாக பகல் நேரத்தில் வெளியில் வரும் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தனது வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது. கடும் வெயில் தற்போது அடித்து வருகிறது. அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கியபோது வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக  சற்று வெப்பம் குறைந்து மழையும் வந்து சற்று வெப்பத்தைக் குறைத்தது. ஆனால் இப்போது எல்லா ஈரப் பதமும் போய் வெயில் வெளுக்கத் தொடங்கி விட்டது.



பகல் முழுக்க கடும் வெயில் அடிக்கிறது. இரவில் புழுக்கம் நீண்ட நேரம் நீடிப்பதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை முதலே வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. பிற்பகல் 12 மணியளவில் சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியிலிருந்தது வெயில். வெயில் கடுமையாக அடித்ததால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

வெளியில் வரவே மக்கள் தயங்கும் அளவுக்கு இன்று வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்றும் இதே அளவில்தான் சென்னையில் வெயில் பதிவாகியிருந்தது. இன்று இன்னும் கூட வெயில் அதிகமாக பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன.  வெயில் அதிகமாக இருப்பதால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டது.

வெயிலும், அனலும் அதிகமாக இருப்பதால் வெளியில் செல்வோர் மிகுந்த தற்காப்புடன் இருப்பது நல்லது. அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தால் தினசரி இளநீர் அருந்துங்கள். பழங்கள் நிறைய சாப்பிடுங்கள். மோர் குடிக்கலாம்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்