டெல்லி: 2வது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட13 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தது. மக்கள், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழ்நாட்டில் மொத்தம் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், திரிபுரா, மணிப்பூர்,ஜம்மு- காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரப் பணிகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வயநாடு தொகுதியில் கடந்த முறை போலவே இந்த முறையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா மற்றும் பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட களமிறங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம் 14 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக, குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் (எஸ்)கூட்டணியில் இணைந்து, காங்கிரஸை எதிர்த்துக் களம் காண்கிறது.
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
தொடுதிரையில் தொலைந்த நட்பு!
காத்திருப்பும் அழகானதே!
பட்டுச் சட்டை போட்ட மச்சான்!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
{{comments.comment}}