தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்

Jan 14, 2026,05:51 PM IST

சென்னை: தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து  தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


சீமான் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:




மண்ணின் மைந்தர்களே  மண்ணை ஆள வேண்டும் என்பதே ஒவ்வொரு  தேசிய இனத்தின்  இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை! அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக  சிவசேனா,  போராடுவது 100 விழுக்காடு சரியானதே!


அதேபோன்று  மராத்திய மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போரிடும் சிவசேனா கட்சியின்,  தாய்மொழி கொள்கையும் 100 விழுக்காடு சரியானதே!  தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இன மக்களின் கருத்தோடும் உடன்படுகின்றோம். தேசிய இனங்களின் உரிமை மீட்புக்கான போராட்டத்தில் மராத்திய மாநில உரிமைக்காக குரல் கொடுக்கவும், துணை நிற்கவும் தயாராக உள்ளோம்!


ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, அம்மண்ணில் நின்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, 'மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்' என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை! ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது.


தம்பி அண்ணாமலையின் கருத்தியல், கோட்பாடு அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். அதற்கு நேர் எதிரான, அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். இருப்பினும், தம்பி அண்ணாமலையின் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, தம்பி அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனும் கொடும்போக்கு ஒரு போதும் ஏற்புடையதல்ல.


அண்ணாமலை ஒரு தனி நபர், ஒரு கட்சியைச்சேர்ந்தவர், குறிப்பிட்ட கொள்கையை ஏற்றவர் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல;  ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல;  


கடந்த காலங்களில் ஆந்திர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கேட்க நாதியில்லை; நடுக்கடலில் மீனவர்கள் தமிழர்கள் என்பதால்  சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கேட்க நாதியில்லை; அப்படி ஒரு நிலை தமிழ் மண்ணில் இன்று இல்லை. அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன்.


தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து  தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் சீமான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்