மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை.. அரசு வேலை.. சீமான் கோரிக்கை

Feb 17, 2023,10:12 AM IST
சென்னை:  மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீமான் இதுதொடர்பாக நீண்டதொரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:



மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும், வீதியில் இறங்கி போராடியும் கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போலத் தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என்பது கொடுங்கோன்மையாகும்.

மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசின் மனச்சான்றற்ற செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.




ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

-  அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.

- அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

- அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும்.

- பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.

- மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.

- மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் அளிக்கும் நரம்பியல் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நரம்பியல் மருத்துவர்கள் உறுதியாகப் பணியமர்த்தப்பட வேண்டும்

- மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் சுழற்சி முறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதோடு, அம்மருத்துவ முகாம்களிலேயே அவர்களுக்கான பேருந்து மற்றும் ரயில் பயண, கட்டண சலுகை அட்டையைப் புதுப்பிக்கும் வசதியை செய்துதர வேண்டும்.

- மாற்றுத்திறனாளிகளுக்கான மின்கல சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் சேவை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

- உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

- ��னைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக அமைத்துதர வேண்டும்  என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்