சென்னை: அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழக முதலமைச்சர் அண்ண ஸ்டாலின் அவர்கள் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும், அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள். ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை..
திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள். முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம் . முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க. பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்... தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க.
இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.. மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்.... அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
{{comments.comment}}