சென்னை: சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை காலங்களில் அதிக மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எதிர்கொள்ள புதிய ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
சென்னை மாநகருக்கு என தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் ஆணையத்தில் இடம்பெற்றுள்ளனர்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}