டெல்லி: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி, வெள்ளிக்கிழமை அன்று டிரினிடாட்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசத் தீர்மானித்த பாகிஸ்தான், எவின் லூயிஸ், ரோஸ்டன் சேஸ் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் அரை சதங்கள் அடித்த போதிலும், மேற்கிந்திய தீவுகள் அணியை 280 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் ஆடிய பாகிஸ்தான், 48.5 ஓவர்களில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.
வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இந்த நான்கு விக்கெட் சாதனையுடன், ஷஹீன் தனது 65வது ஒருநாள் போட்டியில் 131 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஷஹீன் இப்போது 65 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன், 65 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் ரஷித் கான் (128 விக்கெட்டுகள்). அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஷஹீன்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 280 ரன்கள் எடுத்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் 284-5 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கேப்டன் முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் நவாஸ் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் ஒரு சிக்ஸர் மற்றும் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடக்கம். ஆட்டநாயகனாகவும் நவாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமையும் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}