ஒரு மிடறு!

Jun 08, 2026,12:04 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஒரு மிடறு நீர் போதும்

என் விடாய்

தணிந்து விடும்.

குடுவை நீரில்

ஒரு கோப்பை;

ஏன் தர மறுக்கிறாய்?


ஒரே ஒரு சொல் போதும்

என் வெறுமை களைய,

ஒரு நூறு கவிதை  பாடும் வாயினால்

ஒரு சொல் எனக்காக உதிராதா?




ஒரே ஒரு பார்வை போதும்

என் உயிர் துளிர் விட;

வெற்றுப் பார்வை விட்டு

சற்றே கனிவுடன்

ஒரு பார்வை 

 என் உயிர் தங்குமே!


ஒரே ஒரு தீண்டல் போதும்;

என் நம்பிக்கை  நீள;

ஒரு  தொடுகையில்

'நான் இருக்கிறேன்'

என்று

இயம்பலாகாதா? 


ஆகும்!

ஆகாதெல்லாம் ஆகும்!


நீ நீயாக இருந்தால் மட்டுமே ஆகும்!


அதற்கு, 

நீ நானாக வேண்டும்!

மனப்பிணக்கம் விட்டு!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்