திருப்பூர்: உடுமலை குடிமங்கலம் சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். இவருக்கு உடுமலை, குடிமங்கலம் மூங்கில் தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது.அந்த தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் தோட்டப்பணியாளர்களாக பணியாற்றிவருகின்றனர். இன்று அதிகாலையில் அவர்கள் குடுபோதையில் ரகளை செய்வதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனை விசாரிப்பதற்காக எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவல் ஓட்டுநர் ஒருவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களுடன் விசாரணை நடத்தி வந்துள்ளார் எஸ்.ஐ. சண்முகவேல். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த எஸ்.ஐ. சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த தகவல் அறிந்த காவல்துறை உயர்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பக்கட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறுதல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவிழினையும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் திரு. அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா மோத்வானிக்கு என்னாச்சு.. கணவர் புகைப்படம், கல்யாண வீடியோவை நீக்கினார்!
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!
{{comments.comment}}