மும்பை: இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தின் பெயர் சிக்கந்தர் என்பதையும், இப்படம் ஈத் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்படுவதாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதுபடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ளது. கஜினி உள்ளிட்ட 2 படங்களை இயக்கி பாலிவுட்டிலும் ஒரு மிகப்பெரிய வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் ஏ ஆர் முருகதாஸ். அதன் பிறகு அவர் இந்தியில் எந்த படமும் இயக்கவில்லை இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியில் படம் இயக்க களம் இறங்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற பெயரில் உருவாகும் புது படத்தில் ஹீரோவாக கமிட்டாகி உள்ளார் நடிகர் சல்மான்கான். இப்படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.
இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சல்மான்கானின் புது படங்கள் எதுவும் வெளிவரவில்லை. வழக்கமாக ஒவ்வொரு ரம்ஜான் பண்டிகை என்றும் சல்மான்கானின் புதிய படம் ரிலீஸ் ஆவது வழக்கம் இந்த முறை அது மிஸ் ஆகிவிட்டது. இருப்பினும் சல்மான் கான் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
2025 ஆம் ஆண்டு அதாவது அடுத்த வருடம் ரம்ஜான் பண்டிகை அன்று தன்னுடைய புதுப்படம் சிக்கந்தர் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார் சல்மான்கான். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் சல்மான் கான் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாசுடன் தான் இணைந்து சிக்கந்தர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும்,இப்படம் அடுத்த வருடம் வெளியிட இருப்பதாகவும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் ஈத் முபாரக் என பதிவிட்டுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}