சென்னை: ரஜினியை சந்தித்த சிம்ரன், ரஜினியுடனான சந்திப்பு காலத்தால் அழியாதவை என்று நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்ரன். இவர் ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர். விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்தார். பேட்ட படமும் பெரிய வெற்றியை பெற்றது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் நடிகர் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் தற்போது வைராகி இணையத்தில் பரவி வருகிறது.
மேலும், ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் தனது எக்ஸ் தள பதிவில், சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். டூரிஸ்ட் பேமிலி மற்றும் கூலி படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}