சிந்தனைச் சிதறல்.. பிரசவ வலி பெண்களுக்கு.. பிரிவின் வலியோ ஆணுக்கும்!

Apr 08, 2026,12:46 PM IST

- அ.தாமஸ்


பத்து மாதங்கள் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்த தாய்க்கும் பிரசவம் என்னும் பிரிவில் கூட அது வலிக்கத்தான்  செய்கிறது மீண்டும் அக்குழந்தையைத் தன் கரங்களில் தாங்கி முத்தமிடும் வரை.


பிரசவ வலி வேண்டுமானால் பெண்ணுக்கு உரியதாக இருக்கலாம் ஆனால் பிரிவின் வலி பெண்ணுக்கு நிகராய் ஆணும் இருக்கவே செய்கிறது.


பிள்ளைகளின் நலனுக்காய் பொருளீட்ட நெடுந்தூரம் பயணிக்கும் தந்தை ஊரின்  எல்லையில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஊரையும் , தன்னைப் பிரிய முடியாமல் கலங்கி நிற்கும் உறவுகளின் துயரையும் கண்டு இதயம் கனத்து கண்கள் கலங்கினாலும் தன் துயரை ஒரு துளியும் வெளிப்படுத்தாமல் சிரித்த முகத்துடனே அவர்களை மீண்டும் சந்திக்கும் நினைவோடு பிரியும் அந்த பிரிவுக்கு நிகரேது.




இந்த வலியை சந்திக்காத சிந்திக்காத மனிதர்களே இல்லை இருந்தும் சிறு புன்னகையுடன் கடந்து போவதற்கு தான்  உலகின் உயரிய வலிமை தேவைப்படுகிறது.


அந்தப் பிரிவின் வலியை புன்னகையோடு சுமக்கப் பழகினால் வாழ்க்கை சுகமாகும் இல்லையேல் அதுவே பெரும் சுமையாகும். 


இன்றைய பிரிவை நினைத்து கலங்கி நிற்காமல் இப்பிரிவு தான் நாளைய நம் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை உணர்ந்து நேற்றைய நினைவையும்,நாளைய இணைவையும் நினைத்து மகிழ்வோடு பயணிப்போம். ஆம் இப்பிரிவு தான் நம் உணர்வையும், உறவையும் உறுதிப்படுத்தி உள்ள அன்பில் நிலைநிறுத்தும். 


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்