காஞ்சியின் பேரொளியே!

Sep 24, 2026,02:57 PM IST

- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி


ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர 

ஹர ஹர சங்கர 

ஜெய ஜெய சங்கர  !


மஹா பெரியவா  ஸ்ரீ மகா பெரியவா காஞ்சியின் பேரொளியே மகா பெரியவா  !

புன்னகை பூத்திடும் புனித திருமுகமே மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா  !


காலங்கள் போற்றிடும் கருணை உள்ளமே காவியின் ஆடையில் உந்தன் ஞானமே !

மஹா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா  !


அறமெனும் ஒளியாய் அன்பெனும் அமுதமே கனிவுடன் பேசிடும் காஞ்சியின் வேதமே  !

அற்புதத் திருவே ஆன்மீக உருவே  மௌனத்தின் மொழியே மகிமையின் கருவே !


புனிதத்தில் மலர்ந்த புண்ணிய நதியே

மண் மீது நடந்த மாணிக்க மலையே  !


மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா  !




மனங்களின் இருளை கலைந்தவன் நீயே 

மாசற்ற ஜோதியாய்

மகிமை செய்தாயே !


வேதத்தின் ஒளியாய் விளங்கி நின்றாயே 

விவேகத்தின் மொழியாய் உருவெடுத்தாயே  !


ஏழையின் கண்ணீரை ஏந்திடும் துணையே 

எளியவர் வாழ்வில் அருள் புரிவாயே  !


மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா  !


அன்னையாய் அன்புடன் ஆதரித்தாயே

அருள்மிகு பார்வையால் 

அமைதி தந்தாயே  !


நோயிலும் துயரிலும் நம்பிக்கை நாடியே

வந்தவர்க்கு எல்லாம் வாழ்வளித் தாயே !


பேசாத மௌனத்துள் பேரொளி நிறைவாய் 

பேதங்கள் மறைந்திட பேரன்பு தருவாய்  !


மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா    !


பேரின்ப வாழ்வினை பேணிட அருள்வாய் 

பெரியவா உன் புகழ் போற்றிட மகிழ்வாய்  !


காஞ்சியின் கற்பகமே கருணையின் வடிவமே

காலங்கள் போற்றிடும்

ஞாலத்தின் ஞாயிறே!


மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா!

மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 

மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா  !

மகா பெரியவா ஸ்ரீ மஹா பெரியவா  !


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்