சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை.. பள்ளிகளுக்கு லீவு இல்லை.. மாணவர்கள், பெற்றோர் கவலை!

Dec 12, 2024,10:34 AM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட சில ஊர்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் அம்மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்காததால் அரையாண்டு தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற சூழ்நிலையால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டது.


வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், திருவாரூர், சேலம், உள்ளிட்ட பல்வேறு  கன மழை பெய்து வருகிறது.இதனால் மழை பெய்யும் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்துள்ளனர். இதனால் விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதற்கிடையே மழையின் போக்கினை தெரிந்து கொண்டு வட்டார கல்வி அலுவலர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம். மழை தீவிரமான பகுதிகளில் உங்களது பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே விடுமுறை விட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் மழை பெய்து வரும் நிலையிலும் கூட அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லையாம்.


காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை இடைவிடாத மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் தொடர் மழை பெய்த போதிலும் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் கொட்டும் மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அரையாண்டு தேர்வு இருப்பதால் பெற்றோர்களும் பயந்து கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும் உருவாகியுள்ளது.  


சிவகங்கை மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்த போதிலும் அரையாண்டு தேர்வுகள் இருப்பதால் மாணவர்கள் கவலையுடன் மழையில் நனைந்து பள்ளிக்கு செல்கின்றனர். சிவகங்கைக்கும் விடுமுறை விட்டிருக்கலாம். தேவையில்லாமல் மாணவ, மாணவியர் நனைந்து கொண்டு செல்லும் நிலையை உருவாக்கியது ஏன் என்று பெற்றோர்கள் கவலையுடன் குரல் எழுப்பியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்