விருதுநகர்: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 80க்கும் மேற்பட்ட அறைகளில் 200 அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது அறை எண் 62ல் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45), முத்துவேல் (45) ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சித்தமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சரோஜா, செவலூரைச் சேர்ந்த சங்கரவேல் ஆகியோர் 60 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வ ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}