- சிவ.ஆ. மலர்விழி ராஜா
சிவபுராணம்....!
ஓம் நமசிவாய வாழ்க....!
ஜோதி லிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தல்;
மஹா விஷ்ணு மற்றும் பிரம்ம தேவர் இருவரும் பல யுகங்களாக தனது பயணத்தை தொடர்ந்த நிலையில் இருவராலும் சிவபெருமானின் அடியையோ" முடியையோ காண இயலவில்லை. மகாவிஷ்ணு இந்த லிங்க வடிவம் முடிவற்றது என்பதை உணர்ந்து தனது முயற்சியை கைவிட்டு வந்த இடத்திற்கே மீண்டும் திரும்பினார்.
ஆனால்.....
பிரம்ம தேவர் லிங்க வடிவத்தின் உச்சியை
காணும் முயற்சியை கைவிடாமல்
பயணத்தை தொடங்கினார். ஒரு சிறிது கால இடைவெளியில் லிங்க வடிவத்தின் உச்சியில் இருந்து தாழம்பூ வருவதை பிரம்ம தேவர்
கண்டார்.

பிரம்ம தேவர்
தாழம்பூவின் அருகில் சென்று லிங்கத்தின் உச்சியை காண
இன்னும் எவ்வளவு காலம் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் என்று வினவினார். அதற்கு தாழம்பூ இன்னும் பல கோடி யுகங்கள் கடந்து செல்ல வேண்டும் என்று கூறியது.
இதனை கேட்டதும் பிரம்ம தேவர்
மலைப்புற்று இன்னும் பல கோடி ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டுமா என்று யோசித்தார்.
சிறிது நேர சிந்தனை க்கு பிறகு தாழம்பூவிடம்
ஒரு உபாயம் வேண்டும் என வேண்டினார்.
பிரம்ம தேவரின் வேண்டுதலுக்கு இணங்கி வேண்டிய உதவி அளிப்பதாக தாழம்பூ உறுதி அளித்தது.
பிரம்ம தேவரும்
தாழம்பூவும் பயணம் மேற்கொண்டு ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பினர்.
சகலமும் உணர்ந்த பரம்பொருள் இவை
அனைத்தையும் உணர்ந்து கொள்வார் என்பதை மறந்து போனார்கள்.
இறுதியாக மஹா விஷ்ணு இருக்கும் இடத்தை அடைந்த பிரம்ம தேவர்
விஷ்ணுவிடம் தான் லிங்கத்தின் முடியை கண்டதாகவும் அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என கூறினார்.
தாழம்பூவும் பிரம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிக்கு இணங்கி ஆமாம் பிரம்ம தேவர் லிங்கத்தின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூறியது.
தாழம் பூ உரைப்பது பொய் என்று மிகவும் கோபத்துடன் அசரீரி உரைத்தது.
லிங்கத்தில் இருந்து வந்த அசரீரியை
கேட்ட பிரம்ம தேவர் அதிர்ந்து போனார். அப்போது மஹாவிஷ்ணு என்ன நிகழ்ந்தது என்று அறியாமல் நின்றார்.
பின்பு .....
பிரபஞ்சத்தின்
ஜோதிலிங்கமானது
சிவபெருமானாக
காட்சியளித்தார்.
ஆனால் சிவபெருமானை காண இயலாத வகையில் ஒளியானது பிரகாசித்தது.
மீண்டும் இருவரும் சிவபெருமானை வணங்க ஒளியின் பிரகாசம் குறைந்து அவர்களுக்கு பரிபூரணமாக சிவபெருமான்
காட்சியளித்தார்.
காட்சியளித்த சிவபெருமான் பிரம்மா வை நோக்கி நீர் செய்தது தவறு என்று உரைத்தார்.
செய்த தவறுக்காக நீர் படைக்கும் சிருஷ்டியில்
உமக்கு கோயில் இல்லாமல் போகவும்
பொய் சாட்சி சொன்ன தாழம் பூ பூஜைக்கு பயன்படாமல் போகட்டும் என சபித்து விட்டார்.
தான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவர் சிவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். கோபம் கொண்ட சிவபெருமான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவரை மன்னித்தருளினார்.
பின்பு இருவரும் சிவனை வணங்கி நின்றார்கள். அப்போது சிவபெருமான் திருமாலை காக்கும் தெய்வமாகவும்
பிரம்மாவை படைக்கும் தெய்வமாகவும் இருப்பதற்கு அருளாசி வழங்கினார்.
மேலும்....
மஹாவிஷ்ணு சிவபெருமானிடம் பிரபஞ்ச உபதேசம் செய்தருள வேண்டினார்.
சிவபெருமான் அவரது வேண்டுதலை ஏற்று உபதேசம் செய்தார்.
சிவபெருமான் அருளிய உபதேசங்களில் இருந்து மஹாவிஷ்ணு மந்திரத்தையும் அதனை கடைப்பிடிக்கும் முறைகள் அனைத்தும் உணர்ந்தார்.
பின்னர் மஹாவிஷ்ணு தான் சிவபெருமானிடமிருந்து
கற்ற உபதேசத்தை பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்தார். விஷ்ணு உபதேசிக்கும்
நேரம் சிவபெருமான் அங்கு தோன்றினார்.
பிரம்ம தேவர் சிவபெருமானிடம்
சிருஷ்டியில் வாழும் உயிர்கள் அறவழியில் நடந்து மோட்சம் பெறும் வழியையும் வேண்டினார்.
சிவபெருமானும் அவரின் வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார்.
அடியும் முடியும் முடிவற்றதாக உள்ள லிங்க வடிவத்தை வழிபட்டால் நாம் வாழும் வாழ்க்கையில் எது உண்மையான அன்பு மற்றும் எதில் எல்லா வகையான நிம்மதிகள் உள்ளது என்பதை அறிந்து பிறவிகளில் உன்னத நிலையான பிறவா நிலையை அடைவார்கள் என்று ஞான வழியை போதித்தார்.
படைக்கும் தொழிலை பிரம்மா தொடங்கினார்.
அந்த உயிர்கள் உயிர் வாழ தேவையான
உயிர் சக்தியை அளிக்கும் படியாக மஹாவிஷ்ணுவிடம்
வேண்டினார்.
பிரம்ம தேவரின் வேண்டுதலுக்கு இணங்கி அவர் உயிர் சக்தியை அளித்தார்.
உயிர்கள் வாழ்வதற்கு தகுந்த இடங்களையும்
நிலப்பரப்புகளையும்
படைத்தார்.
நில பரப்புகளில் விஷ்ணுவின் அருளால் உயிர்கள் தோன்றியது.
படைப்பு தொழிலில் அவருக்கு உதவும் வகையில் பிள்ளைகள் தோன்றினர். ஆனால் அவர்களால் எந்தவொரு நற்ச்செயலும் இன்றி மனம் வருந்தினார் பிரம்மா.
அவரது நிலையறிந்த
பெருமான் அவரது கவலையை தீர்ப்பதாக வரம் அளித்து
மறைந்தார்.
சிவபெருமானின் அருளால் அவர்நினைத்தபடியே பிரஜாபதிகளை படைத்தார்.
பிரஜாபதிகள் என்பவர் கள் படைப்பு தொழிலுக்கு உதவியாக பிரம்ம தேவரால் படைக்கப் பட்டவர்கள்.
பிரஜாபதிகள் பத்து பேர்....
மரீசி -அத்திரர் - அங்கிரசர்- புலஸ்தியர்-புலகர்- கிருது-வசிஷ்டர்- தக்கன்-பிருகு- நாரதர்-
போன்றவர்கள் பிரம்ம தேவரால் படைக்கப் பட்டவர்கள்.
பின்னர் சப்தரிஷிகளையும்
அதன் பின்பு உயிரினங்கள் மற்றும்
மானிடர்கள் தோற்றுவிக்கப்பட்டனர்.
ரிஷிகளின் தோற்றத்திற்கு பின்னர் தேவர்களும் அசுரர்களும் உருவாக்கப்பட்டனர்.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம்.....
(திருவிளையாடல் புராணம் தொடரும்.... )
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
Motivation: தன்னம்பிக்கை!
Poem: Only one Earth.. ஒரே பூமி!
காகிதம்!
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
Poem on Love: காதல்!
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
{{comments.comment}}