Amarnath Yathra.. எனது கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரை.. ஒரு பயணக் கட்டுரை (1)

Apr 20, 2026,11:15 AM IST

- உமாராணி சங்கரலிங்கம்


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


பயணம் என்றாலே அனைவர்க்கும் விருப்பமானது. அதுவும் ஆன்மீகப் பயணம் என்றாலே மிக மிக விருப்பமானது. ஆன்மீகப் பயணத்தின் போது மிகச்சிறந்த குருவுடன் செல்லும்போது மிகப் பாதுகாப்பாக உணர முடியும்.


2019இல் கைலாஷ் யாத்திரை சென்றது மிக அற்புதமான பயணம். அதற்கு பிறகு 2022 இல் காசி யாத்திரை சென்றோம். அப்போது எங்களை அழைத்துச் சென்ற முருகராஜ் அண்ணா அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அமர்நாத் யாத்திரைக்குச் செல்வதைப் பற்றிக் கூற நாங்களும் சரி என்றோம். அவர் 6,7 முறை  அமர்நாத் யாத்திரை சென்றவர். 


அமர்நாத் யாத்திரையைப் பற்றி யாரிடம் கேட்டாலும் மிக மிகக் கடினமான பயணம் என்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் யாரிடமும் கேட்பதில்லை நாங்கள். ஈசனிடம் தினமும் வேண்டுதல், மற்றும் சூரிய பகவானிடம் ஒரு agreement, தினமும் வந்து எங்களுக்குத் தரிசனம் Time வேண்டும் என..


முருகராஜ் அண்ணா யாத்திரைக்குச் செல்ல வேண்டிய ஆயத்த வேலைகளில் ஈடுபடலானார். Application forum, compulsary health certificate for Shri amarnath yatra 2022 ஐயும் அனுப்பி fill up பண்ணச் சொன்னார்கள். Blood, sugar test, ECG certificates எல்லாவற்றையும் அனுப்பச் சொன்னார்கள். எங்களுடன் வந்தவர்கள் சிலர் trainல் வருவதால் அவர்களுக்கும் , அவருக்கும் tickets எடுத்து விட்டார். என் கணவரின் பணி நிமித்தம் காரணமாக நாங்களும், கோவையில் உள்ள கணவரின் கல்லூரி தோழர் அன்புமணி அண்ணாவும், அவரின் மனைவி தேவசேனா அவர்களும் flight இல் ஜம்மு வரை போக முடிவு செய்தோம்.




கையில் எடுத்துக் கொண்ட பொருட்கள் Aadhar card, covid injection போட்ட certificate, BSNL roaming sim, (postpaid), thermal wear dress, cotton socks, cotton gloves, monkey cap for head production, sun glass, light weight water resistant shoe, chappal, lip guard, face cream, ear protection cotton, கற்பூரத்தை ஒரு சிறிய துணியில் வைத்துக் கட்டி கையில் கட்டிக் கொள்ள வேண்டும், மலை ஏறும்போது அதை முகர்ந்து கொண்டு சென்றால் breathing problemத்தை தடுக்க முடியும். 


மேலும் dry fruits,snacks while climbing, glucose,energy powder, light weight back bag, good shawl, regular medicines, emergency medicine, good camera எல்லாவற்றையும் தயார் பண்ணச் சொன்னார்கள். முருகராஜ் அண்ணா மட்டும் எப்பொழுதும் positive ஆகப் பேசிக்கொண்டே இருந்தார். நிறைய தடங்கல்கள் வந்தாலும் ஈசனை மட்டும் நினைத்துக் கொண்டே காரியங்களைச் செய்தோம்.. 


அமர்நாத் யாத்திரை மிகக் கடினமான பயணம் என்பதால் கிளம்புவதற்கு முன்னால் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து ஸ்ரீ ருத்ர பூஜை செய்யுமாறு  முருகராஜ் அண்ணா கூற, அவர்களே எங்கள் வீட்டில் 26. 6. 2022 திங்கட்கிழமை செய்து வைத்தார்கள். அதற்கு முன்னால் கைலாஷ் யாத்திரைக்கு எங்களை அழைத்துச் சென்ற எங்கள் குரு கவனகர் கவனகர் ஐயா எங்கள் வீட்டிற்கு வர அவரிடமும் , விளாம்பட்டியில் உள்ள என் பெற்றோர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றோம். 


30 ஆம் தேதி ஜூன் மாதம் பெட்டியில் packing செய்ய எல்லாம் நிறைவு பெற்றது. அடுத்து நிகழ்ந்ததைப் பற்றி அடுத்து விவரிக்கின்றேன்.


திருச்சிற்றம்பலம்.

ஓம் நமசிவாய.


(பயணம் தொடரும்)


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்