சென்னை: இன்றைய இளம் தலைமுறையினர் பலரின் மனது எந்த அளவுக்கு சென்சிட்டிவாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது சென்னை திருவொற்றியூரில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம். தன்னிடம் கண்டிப்பு காட்டி வந்த தாயை இரக்கமே இல்லாமல் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் ஒரு மாணவர். கூடவே தனது தம்பியையும் அவர் கொலை செய்துள்ளார். திருவொற்றியூரே அதிர்ந்து போய்க் கிடக்கிறது இந்த சம்பவத்தால்.
அந்தத் தாய் செய்த குற்றம் - நல்லா படி, அரியர்ஸ் வைக்காதே, படிப்பில் கவனம் செலுத்து, நல்ல பிள்ளையா இரு.. இவ்வளவுதான்.. இதற்குத்தான் அந்தப் பிள்ளை தன்னைப் பெற்றத் தாய்க்கு இப்படி ஒரு கொடூரமான தண்டனையைக் கொடுத்துள்ளான்.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் முருகன். கிரேன் ஆபரேட்டர், ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் பத்மா. 45 வயதாகும் பத்மாவுக்கு இரு மகன்கள். மூத்தவர் பெயர் நிதீஷ். 2வது பையன் பெயர் சஞ்சய். நிதீஷ், வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி டேட்டா அனாலிஸ்ட் படிப்பை படித்து வருகிறார். இப்போது 3வது வருடத்தில் இருக்கிறார். அதாவது பைனல் இயர். சஞ்சய் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது பையன்.
நிதீஷ் சரியாக படிப்பதில்லை. 10க்கும் மேற்பட்ட பேப்பர்களை அரியர் வைத்துள்ளார். சரியாக படிக்காமல் அரியர் வைத்துக் கொண்டு இருந்ததால் பத்மா கண்டித்துள்ளார். ஒழுங்கா படி, படிப்பில் கவனம் செலுத்து, அரியர்ஸை முடிக்கப் பாரு என்றெல்லாம் அவ்வப்போது அறிவுரை கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்துள்ளார் நதீஷ் . சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு போய் விட்டார். அவரது நண்பர்கள், உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் வியாழக்கிழமை விபரீதமான செயலில் ஈடுபட்டுள்ளார் நிதீஷ். அன்று இரவு ஏதோ சண்டை நடந்துள்ளது போல. அதன் பின்னர் 3 பேரும் படுத்துத் தூங்கப் போய் விட்டனர். இரவில் எழுந்த நிதீஷ், கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். துடிக்கத் துடிக்க அவர் கொலை செய்துள்ளார். பின்னர் தம்பியையும் அவர் அதேபோல கொலை செய்துள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரது இறந்த உடல்களையும் சாக்குப் பையில் போட்டு சமையலறையில் கொண்டு போய் வைத்துள்ளார். பிறகு அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தி மகாலட்சுமிக்கு ஒரு மெசேஜ் போட்டுள்ளார். அதில், எனது போன், வீட்டுச் சாவி, ஒரு டேப் ஆகியவற்றை வீட்டில் வைத்துள்ளேன். உடனடியாக வீட்டுக்கு வரவும் என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த மெசேஜை மகாலட்சுமி நள்ளிரவு போலத்தான் பார்த்துள்ளார். என்னவோ ஏதோ என்று அவர் பதறியடித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடே ரத்தக்களறியாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார். உள்ளே போய் கிச்சனில் பார்த்தபோதுதான் தனது சகோதரியும், அவரது மகனும் இறந்து போய்க் கிடந்தது கண்டு அலறினார். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
போலீஸார் நிதீஷின் செல்போன் சிக்னலை வைத்து அவர் திருவொற்றியூர் கடற்கரைப் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஒரு படகில் படுத்துக் கிடந்துள்ளார் நிதீஷ். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, எப்போது பார்த்தாலும் அம்மா கண்டித்துக் கொண்டே இருந்தார். 14 அரியர்ஸ் வைத்துள்ளேன். அதைச் சொல்லி திட்டி வந்தார். இதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன். அம்மா போன பிறகு தம்பி அனாதையாக விடக் கூடாது என்பதற்காக அவனையும் கொன்று விட்டேன்.
அம்மாவையும், தம்பியையும் கொன்ற பின்னர் தற்கொலை செய்து கொள்ளவே யோசித்திருந்தேன். பிறகு அதை கைவிட்டு விட்டேன். பிறகுதான் எனது சித்திக்கு மெசேஜ் போட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்தப் பையனின் வாக்குமூலத்தைப் பார்க்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. சிறு பிள்ளைத்தனமாக இவ்வளவு பெரிய விபரீதத்தை செய்துள்ள நிதீஷ் நிலைமை கவலை தருகிறது. தற்போது நிதீஷை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். அவரது தந்தை முருகனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர் ஓமனிலிருந்து கிளம்பி வந்து கொண்டுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}