ஏன் கல்யாணம் பண்ணி வைக்கலை.. தாயை அடித்தே கொன்ற மகன்!

Aug 25, 2023,02:56 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் தனக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்காத தாயை அடித்தே கொன்றுள்ளார் அவரது மகன்.

சித்திப்பேட்டை மாவட்டம் பந்தா மயில்ராம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில் 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது. மகன் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார். மகனுக்கும் திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தார் அந்தப் பெண். ஆனால் ஒரு பெண்ணும் அமையவில்லை.



இதனால் மகன் கோபமடைந்தார். தனது தாய் சீரியஸாக தனக்குப் பெண் பார்க்கவில்லை என்று கூறி அவருடன் அடிக்கடி சண்டை பிடித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வழக்கம் போல சண்டை மூண்டது. அப்போது தனது தாயை அடித்தே கொன்று விட்டார் இந்த கொடூர மகன்.

இந்த சம்பவம் தொடர்பாக மகனையும், உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.  செங்கல்லை வைத்து அடித்துக் கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அ்நத மகன். அடித்துக் கொன்றதோடு நில்லாமல் அவரது தொண்டையையும் கத்தியால் கிழித்துள்ளனர். மேலும் அவரது கால்களையும் வெட்டியுள்ளனர்.  இந்தக் கொலை மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்